மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 11 பேரில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளதாகவும் எஞ்சியவர்களை அடையாளம் காணும்பொருட்டு டி.என்.ஏ. பரிசோதனை அல்லது கைரேகைப் பரிசோதனை நடத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

