100க்கும் அதிகமான குண்டுகள் துளைக்கப்பட்டு கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி!

325 0

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பொலிஸ் அதிகாரியொருவர் 100க்கும் அதிகமான முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோவில்  காணப்படும் போதைப்பொருள் கலாசாரத்தை ஒடுக்கும் வகையில் அந் நாட்டுப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போதைபொருள் கடத்தல் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறன.

அந்தவகையில் மெக்சிகோ பொலிஸ் துறையில் அதிகாரியாக 24 ஆண்டுகளாக செயற்பட்டு வந்த  ரமோன் முனிஸ் (50) என்பவரை  அண்மையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் தாங்கள் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு 100 க்கும் அதிகமான முறை  கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மெக்சிகோவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.