களனி, சபுகஸ்கந்த பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விகாரையின் தேரர்கள் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகொல பொது சுகாதார பரிசோதகர் எஸ்.பெரேரா தெரிவித்தார்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் இரண்டாவது முறையாகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர் என தெரிவிக்கப்படுகிறது.

