கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கைதிகள் 5 பஸ்களில் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறைச்சாலைகளுக்குச் சொந்தமான பஸ்களில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
சக கைதிகள் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், குறித்த கைதிகள் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் அங்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்துக்குச் சிறைச்சாலை பஸ்களில் கொண்டு வரப்பட்டனர்.

