யாழில் பல பகுதிகள் நீரில் மூழ்கின

370 0

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இதனால் மக்கள், தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர்.

புரெவி புயல் தாக்கத்தினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக  13 ஆயிரத்து 707 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 318 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக  யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.