கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமம் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.
கண்டி – போகம்பரை கிராமத்தில் 25 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடு த்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதா மத்திய மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 301 பேர் , மாத்தளை கண்டி மாவட்டத் தில் 52 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமத் தில் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் போகம்பரை கிராமத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தத் தீர்மானம் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

