கிளைமோர் குண்டுடன் பயணித்தவர்களை கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

346 0

பேருந்து ஒன்றில் கிளைமோர் குண்டு ஒன்றை எடுத்தச் சென்றதை கண்டுபிடித்த பாதுகாப்பு அதிகாரிகளை பாராட்டும் விதமாக பதவி உயர்வு மற்றும் விஷேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களை பாராட்டுவதற்காக பாரிய பணத் தொகை வழங்குவதாகவும் அவர்கள் செய்த செயலை மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.