அட்டுலுகம பகுதியில் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் குறித்த கொரோனா தொற்றாளரை அழைத்துவர சென்ற பொழுதே அவர் இவ்வாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

