சிறிலங்காவில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

218 0

சிறிலங்காவில் இன்று மட்டும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25ஆயிரத்தைக் கடந்து 25 ஆயிரத்து 760ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 728 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 19 ஆயிரத்து 32 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 604 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிறிலங்காவில் இதுவரை 124 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.