அங்குவிலா தீவின் ஆளுநராக ஈழ தமிழ் வம்சாவளிப் பெண் நியமனம்

355 0

பிரித்தானியாவின் காலனித் தீவான அங்குவிலாவின் ஆளுநராக ஈழ தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திலினி டானியல் செல்வரத்னம் என்ற ஈழத் தமிழ் வம்சாவளிப் பெண்ணை பிரித்தானிய அரசு நியமித்துள்ளது.


அங்குவிலா என்பது கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு பிரித்தானிய காலனித் தீவு.

டிம் ஃபோய் தற்போது அங்கு ஆளுநராகச் செயற்படுகிறார். அவரை தொடர்ந்து 2021 ஜனவரி 21ஆம் திகதி திலினி பதவியேற்கவுள்ளார்.

நவம்பர் 27ஆம் திகதி இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.

 

91 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்புடைய அங்குவிலா தீவில் 18,090 மக்கள் வாழ்கிறார்கள். 1667ஆம் ஆண்டு முதல் பிரான்ஸுடனான ஒப்பந்தமொன்றின் பிரகாரம் அந்தத் தீவு, பிரித்தானியாவின் காலனியாக உள்ளது.

பிரித்தானியாவின் சுயாதீன பொது விசாரணை அமைச்சில் தற்போது கடமையாற்றி வரும் திலினி 1999 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் சட்டத்தரணியாக உள்ளார்.