மூதூரில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

234 0

திருகோணமலை – மூதூர் பகுதியில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (02) தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளில் இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளிற்கே இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

20 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 இலட்சம் ரூபா நட்டஈடு விதிக்கப்பட்டுள்ளது.

நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 4 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு 20,000 ரூபா தண்டப்பணத்தை விதித்துள்ள நீதிபதி, அதனை செலுத்த தவறும்பட்சத்தில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை – மூதூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் 35 வயதை விட குறைந்த திருமணமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரதிவாதியிடம் மேற்கொள்ளப்பட்ட உயிரணு பரிசோதனை மற்றும் சாட்சியங்களூடாக அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது