கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது

267 0

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு குறித்த காளான் எடுத்து செல்லப்பட்டது.

நேற்று மாலை விவசாய ஆராய்ச்சி உதவி ஆணையாளர் கலாநிதி அரசகேசரி விவசாயியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டதுடன், விவசாய ஆராய்ச்சிக்காக அதனை எடுத்து சென்றுள்ளார்.

குறித்த காளானிலிருந்து மாதிரிகள் விவசாய ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த காளான் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியின் பின்னர் வெளியிடுவதாக கலாநிதி அரசகேசரி தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் வீட்டில் குறித்த மழைக்காளான் அறுவடை செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.