சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுதில்லை – ஜீ.எல். பீரிஸ்

289 0

aafasfafgvஎதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை.

எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படுவதில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தற்போது இலங்கை நாடாளுமன்றில் எந்தவொரு நாட்டிலும் பின்பற்றப்படாத சம்பிரதாயம் நடைமுறையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஏனெனில் சகல நாடுகளிலும் அரசாங்கத்தின் மீது மாற்று கருத்து உள்ளவர்களே எதிர்க்கட்சியாக செயற்படுகின்றனர்.

மேலும் தேவையான சந்தர்ப்பத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்சியமைக்கும் சக்தி உள்ளவர்களே எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டைப்புக்கு நாடாளுமன்றில் 16 ஆசனங்களே உள்ளன.

ஆந்த கட்சிக்கு 4.6 சதவீதமான வாக்குகளே தேர்தலில் கிடைத்தது. ஆனாலும் அக்கட்சிதான் தற்போது எதிர்கட்சியாக உள்ளது.

ஆகையினால் நாட்டில் முன்னெடுக்கப்படும் ஆராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நாட்டின் பொருளாதாரத்தில் தற்போது பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.