பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு கொரோனா

222 0
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கொழும்பு ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்றுள்ளார்.

மீண்டும் ஊர் திரும்பும் வழியில் அவரிடம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையில் குறித்த மாணவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று குறித்த பாடசாலை வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.