க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா

261 0

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 10 நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன, பாடசாலைகள் ஆரம்பிக் கப்பட்டு முதல் நாள் பாடசாலை மாணவர்களின் வருகை நூற்றுக்கு 33 சதவீதமாகக் காணப்பட்டது, 24 ஆம் திகதி நூற்றுக்கு 44 சதவீதமாகக் காணப்பட்டது,நேற்றைய தினம் நூற்றுக்கு 51 சதவீதமாகக் காணப்பட்டது.

விமர்சனத்திற்குப் பயந்து எதுவும் செய்யாது இருப்பது தீர்வு அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாடசாலைகளை மூடுவது என்பது மாணவர்களின் வாழ்க்கையை மூடுவதாகும்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்துப் பெற்றோர் முன்வைத்த கோரிக்கை , பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் வாழ்க்கை போன்ற முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர் மானம் எடுக்கப்பட்டது என்றும் இது பொறுப்பற்ற தீர்மானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, மாகாண கல்வி அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், சுகாதாரத் துறை, அதிபர்கள் உட்பட அனைவருடனும் கலந்துரையாடிய பின்னர் அந்த அந்த மாகாணங்களில் நிலைமைகளை அறிந்து பாட சாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம் எடுக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு Zinc basin, தொற்று நீக்கிகள் போன்றன வழங்கப்பட்டுள்ளது, இதுதவிர பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதில் ஏதேனும் குறைபாடு கள் இருந்தால் இதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ள மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முறை க.பொ.த உயர்தர பரீட்சையை நடத்துவதற் குச் சவாலை எதிர்கொண்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.

இரண்டு முறை க.பொ.த. உயர்தர பரீட்சைகள் நடத்து வதற்கு தடை ஏற்பட்டது இருப்பினும் பரீட்சைகளை வெற்றி கரமாக நடத்தி முடித்தமைக்காக மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெற்று 33 நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.