உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்

214 0

கொள்ளுப்பிட்டி குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (வியாழக்கிழமை) காலை உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த அதிகாரி திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் தொடர்பாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.