இதய அஞ்சலி……….!………..!

469 0

தரணி எங்கும் எங்கள் தாயகக் கொள்கை கண்டு தலைவணங்கியது. பல்லாயிரக் கணக்கான வீரர்கள் எம் தாயகக் கனவினை நெஞ்சினிற்று சுமந்து விடுதலைப் போரில் வித்தானார்கள்.

பெற்றோரை ,சகோதர்களை.நண்பர்களை, மனைவியை, குழந்தைகளை பிரிந்து தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதி ஆக்கிய உறவுகளை ஒரே நாளில் நினைவு வணக்கம் செலுத்தும் புனித நாளான கார்த்திகை 27 ஆம் நாளை சிறிலங்கா பௌத்த பேரினவாதம் சட்டம் போட்டு தடுக்கின்றது.

நினைவுகூருவதற்கான எமது உரிமையை ”கொரோனா” . தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத் தடை உத்தரவை விதித்து தடுக்க முடிவு செய்துள்ளது.

மாவீரர் நாளை நினைவு கூரப் பிறப்பிக்கப்படும் தடை உத்தரவை இரத்து செய்து, நினைவேந்தலை மேற்கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரும் தடையீட்டு ஆணையை விசாரிக்கும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றிற்குக் கிடையாது எனக் கூறி அது தொடர்பான மனுக்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தார்.

தாயகத்தில் சட்டங்கள் போட்டு நீதிமன்றத் தடை உத்தரவை மீறி யாராவது நினைவுகூரலை நடத்த முற்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சிறிலங்கா காவல் துறை பேச்சாளர் அறிவித்திருக்கின்றார்.

எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் உணர்வோடும் கலந்து எம் உள்ளத்தில் வாழும் மாவீரர்களுக்கு எம் இதயத்தால் நினைவு கூர்வதை யாரால் தடுத்திட முடியும்?

இது எம் இறப்பிற்கு பிறகும் தொடரும் இதய உறவு……