கொரோனா தடுப்பு மருந்திற்காக வரவு செலவுதிட்டத்தில் இலங்கை எந்த நிதியையும் ஒதுக்கீடுசெய்யவில்லை- சரத்பொன்சேகா

248 0

கொரோனா வைரஸ் மருந்திற்காக இலங்கை வரவுசெலவுதிட்டத்தில் எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சரத்பொன்சேகா நாடாளுமன்றில் குற்றசாட்டினை முன்வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்து தயாரிக்கப்பட்டதும் அதனை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மருந்தினை மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இராணுவஅதிகாரி தலைமையிலான குழுவொன்றை அமெரிக்கா ஏற்கனவே நியமித்துள்ளது என குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா இதற்காக அமெரிக்கா 26பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இந்த நடவடிக்கைக்காக ஆகக்குறைந்தது ஒரு பில்லியன் டொலர்களையாவது ஒதுக்கவேண்டும் எனினும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளிற்காக நாங்கள் வரவுசெலவு திட்டத்தில் 16 மில்லியனையே ஒதுக்கீடு செய்துள்ளோம் இதன் அர்த்தம் என்னவென்றால் நாங்கள் இந்த விடயத்தினை முற்றாக அலட்சியம் செய்கின்றோம் என்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கு கொரோனா மருந்தினை வழங்கும் செயற்படும் நடவடிக்கை இலகுவானது என இலங்கை கருதக்கூடாது எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.