கொவிட் – 19 கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ‘பாதுகாப்பாக இருப்போம்’ டிஜிட்டல் தீர்வு

269 0

இலங்கையில் கொவிட் – 19 கொ ரேனா தொற்று பரவ லைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டுப் பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் தீர்வை சகல அரச நிறு வனங்களிலும் பயன்படுததுமாறு ஜனாதிபதியின் செய லாளர் பி.பி. ஜயசுந்தேர அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்ப முகவர் நிலையத்தினால் (ICTA) இலங்கையில் கொவிட் – 19 கொரேனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டுப் பிரஜைகளின் பயணங்களை முகாமைத்துவம் செய்யும் நோக்குடனான இணையத்தள தொழில் நுட் பத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பாதுகாப்பாக இருப்போம்’ (Stat Safe) என்ற டிஜிட்டல் தீர்வை அறிமுகப் படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட் டச் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள், அரச கூட்டுத்தாபனம், நிதி சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள சுற்று நிருபத்தில் இந்த விடயம் குறிப்பிடப் பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொவிட் – 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் நடமாட்டம் மற்றும் அவர்களுடன் தொடர்புப்பட்டவர்களை இனங்காணுதல் ,ஆரோக்கியமானவர்கள் சுதந்திரமாகப் பயணங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத் தல் போன்ற இரு விடயங்கள் இதில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

 

அத்தோடு, ‘பாதுகாப்பாக இருப்போம்’ என்ற டிஜிட் டல் தீர்வு ஊடாக இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ICTA  நிறுவனத்தின் வழிகாட்டி மற்றும் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பாதுகாப்பாக இருப்போம்’ (Stay Safe) என்ற டிஜிட்டல் தீர்வு பரந்துபட்ட மற்றும் பயன் பாட்டுக்கான வசதியான தீர்வாக அமைந் துள்ளதுடன், கொரோனா சிகிச்சையில் தொடர்புப்படும் அனைத்து தரப்பினரைப் போன்று அரச மற்றும் வியாபார நிறு வனங்களுக்காகவும், அனைத்து பிரஜைகளுக்கும் பயனுள்ள தீர்வு என்ற ரீதியில் இதனைப் பயன்படுத்த முடியும்.

இதுதொடர்பான மேலதிக விபரங்களையும், பதிவுக ளையும் www.staysafe.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் அந்த சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு

கசுன் தாரக்க (076 8254047),

சாமேந்திர பெரேரா (071 8327380),

திலின திசாநாயக்க (077 2954866)

ஆகியோருடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். அல்லது hello@staysafe.gov.lk    என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு விபரங் களை பெற்றுக்கொள்ள முடியும்.