ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

382 0

colombo-hight-courtsஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டு தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு எதிரான வழக்கில் சாட்சியளிப்பதற்கே இவர்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு மேலதிகமாக முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் 13 பேருக்கு இத்தினத்தில் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.