துபாயில், சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு நடந்தது. இதில் காரில் இருந்தபடியே உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி சென்று கொண்டிருந்தனர்.
துபாயில் வசித்து வரும் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முகம்மது ஜாசம் மற்றும் அல்மாஸ் அகமது ஆகியோருக்கு திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகள் அல்மாஸ் இங்கிலாந்து நாட்டில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார். ஜாசம், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர்.

