ஈட்டா புயலைத் தொடர்ந்து தென் அமெரிக்க நாடுகளுக்கு காத்திருக்கும் மற்றுமொரு அதிர்ச்சி!

321 0

ஈட்டா புயலின் பேரழிவிலிருந்து தென் அமெரிக்க நாடான ஹோண்டுரஸ் மற்றும் கௌதமாலா உள்ளிட்ட நாடுகள் மீள முடியாத நிலையிலுள்ளன. இந் நிலையில் அங்கு அடுத்த புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கச் சூறாவளி மையம் விடுத்துள்ள அறிக்கையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனில் இருந்து சுமார் 545 கிலோ மீற்றர் தொலைவில் புதிய புயல் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அயோடா என்ற பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல், மத்திய அமெரிக்காவை நெருங்கும் போது பெரிய சூறாவளியாக வலிமையுடன் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜமைக்கா, கவாதமாலா, ஹோண்டுராஸ் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.