எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட 2,500ஆண்டுகளுக்கு முற்பட்ட 100க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்டன.

Saqqara Necropolis பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குறித்த சவப்பெட்டிகள், வர்ணம் பூசப்பட்டு, நன்கு பாதுகாக்கப்பட்ட வகையிலும் அமைந்துள்ளன. கடந்த ஓகஸ்ட் மாதமும் இங்கு 59 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகளும், அதனுடன் தொடர்புடைய மம்மிகள் மற்றும் கலைப்பொருட்களும் எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இது அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


