தாய்லாந்தில் பிரதமரை பதவி விலக வலியுறுத்தி ஆடல் பாடலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

243 0

தாய்லாந்து அரசர் Maha Vajiralongkorn, அந்நாட்டு பிரதமரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, 2,500 க்கும் மேற்பட்டோர் ஆடல் பாடலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்சியாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டால் தான் அரசியல் அமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், பிரதமரை கேலி செய்யும் வாசகங்களை வீதிகளில் எழுதினர்.

பாதுகாப்பு பணியில் 5000 பொலிஸார் ஈடுபட்டிருந்த போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறை உபயோகப்படுத்தப் போவதில்லை என தெரிவித்தனர்.