கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழாத்துக்குழியில் கர்ப்பிணி பெண் குடும்பத் தகராறில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழாத்துக்குழியில் வசித்து வந்தவர் ரேவதி. இவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது.
இந்நிலையில் குடும்பத் தகராறில் ரேவதி இரண்டு பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

