இவன்கா டிரம்ப் கொரோனா விதிமுறைகளை மீறுகின்றார்

326 0

டொனால்ட் டிரம்பின் மகள் இவன்காவும் அவரது கணவரும் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுகின்றனர் என பாடசாலை நிர்வாகம் தொடர்ந்து சுட்டிக்காட்டியதை தொடர்ந்து இவன்கா டிரம்ப் அந்த பாடசாலையிலிருந்து தனது பிள்ளைகளை விலக்கிக்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் உள்ள பாடசாலை பெற்றோர்களின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதை தொடர்ந்தே இவன்கா அந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

நாங்கள் எங்கள் பாடசாலையின் சிறுவர்களின் பாதுகாப்பு- உடல்நலம் குறித்து கவலை கொண்டுள்ளோம் என பாடசாலை நிர்வாகியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என மாணவர்களின் பெற்றோர்களிற்கு பாடசாலை நிர்வாகம் வழங்கிய அறிவுறுத்தல்களை இவன்கா டிரம்பும் அவரது கணவரும் தொடர்ந்தும் மீறியுள்ளனர் என பாடசாலை நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

இவன்காவும் அவரது கணவரும் எவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பது குறித்து எந்த இரகசியமும் இல்லை அனைவரும் அதனை பார்க்கின்றனர் என பாடசாலை மாணவர் ஒருவரின் பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள் காரணமாகவும், முகக்கவசங்களை அணியுங்கள் சமூகவிலக்கலை பின்பற்றுங்கள் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுங்கள் என விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் காரணமாகவும் இறுதியில் இவன்கா டிரம்ப் பாடசாலையிலிருந்தே தனது பிள்ளைகளை விலக்கிகொண்டுள்ளார் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் செய்தது சரியான விடயமில்லை என தெரிவித்துள்ள ஒருவர் இவன்காவும் கணவரும் பாடசாலை நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை வெளிப்படையாக மோசமாக மீறுவது குறித்து பல பெற்றோர்கள் முறைப்பாடு செய்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.