நியூசிலாந்து பிரதமர் ஜான் கே ராஜினாமா

269 0

201612051103025201_new-zealand-prime-minister-john-kay-resigns_secvpf8 வருடங்கள் பதவி வகித்த நியூசிலாந்து பிரதமர் ஜான் கே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். எனவே அடுத்த வாரம் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

நியூசிலாந்தின் பிரதமராக ஜான் கே பதவி வகித்தார். தேசிய கட்சியை சேர்ந்த இவர் அதன் தலைவராகவும் இருந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை பேட்டியின் போது தெரிவித்தார்.

எனது இந்த முடிவு கடினமானது தான் என்றாலும் இத்தருணத்தில் அது சரியானது என கருதுகிறேன். அடுத்து என்ன செய்வது என நான் யோசிக்க வில்லை.

பதவியில் இருந்து வெளியேறிய நான், எனது மனைவி புரோனாக் மற்றும் குழந்தைகள் ஸ்டெபானி, மாக்ஸ் ஆகியோருடன் பொழுதை கழிப்பேன். எனது ராஜினாமா முடிவு தனிப்பட்ட எனது குடும்ப வாழ்க்கைக்காக எடுத்தேன்” என்று தெரிவித்தார்.

வர்த்தகராக இருந்த ஜான் கே 8 ஆண்டுகள் நியூசிலாந்தின் பிரதமராக பதவி வகித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.

அதை தொடர்ந்து 2006-ம் ஆண்டில் தேசிய கட்சியின் தலைவரானார். 2008-ம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து இவர் நியூசிலாந்தின் பிரதமரானார்.

பிரதமர் பதவியுடன் தேசிய கட்சி தலைவர் பதவியையும் ஜான்கே ராஜினாமா செய்துள்ளார். எனவே அடுத்த வாரம் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.

இப்பதவிகளுக்கு துணை பிரதமர் பில் இங்கிலீஷ் தேர்வு செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.