ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது இந்திய மாணவர் வழக்கு

255 0

201612051030256451_indian-origin-student-sued-on-oxford-university-for-boring_secvpfஆசிரியர் சரியாக பாடம் நடத்தாததால் சலிப்படைந்த இந்திய மாணவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது வழக்கு தொடர்ந்தார்.இங்கிலாந்து வாழ் இந்திய மாணவர் பயஸ்சித்திக். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பிராசனோஸ் கல்லூரியில் வரலாற்று பாடம் எடுத்து படித்தார்.

இந்திய பேரரசர்கள் வரலாற்று பாடத்தை ஆசிரியர்கள் சரிவர நடத்தாமல் சலிப்படைய (போர்அடிக்க) வைத்தனர். எனவே அவர் குறைந்த மதிப்பெண் எடுத்து 2-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதனால் அவரால் வக்கீலுக்கு படித்து பணம் சம்பாதிக்க முடியவில்லை.

எனவே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மீது லண்டன் ஐகோர்ட்டில் பயஸ் சித்திக் வழக்கு தொடர்ந்தார். இச்சம்பவம் கடந்த 2000-ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இந்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.