வங்காளதேசத்தில் இந்து கோவில் இடிப்பு – சாமி சிலைகள் உடைப்பு

281 0

201612051109260453_hindu-temple-vandalised-and-idols-smashed-in-bangladesh_secvpfவங்காளதேசத்தில் இந்து கோவிலை மர்ம கும்பல் இடித்து தள்ளி அங்கிருந்த சாமி சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

வங்காளதேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். அங்கு அவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்து கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதனால் அங்கு இந்துக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்காள தேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நெட்ரோ கோனா என்ற இடத்தில் இந்து கோவிலை மர்ம கும்பல் இடித்து தள்ளியது.

மேலும் அங்கிருந்த 3 சாமி சிலைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதில் ஒன்று காளி சிலையாகும். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.