உலகின் மிக விலையுயர்ந்த உணவு எது தெரியுமா?

853 0

உலகின் மிக விலை உயர்ந்த உணவுப் பொருட்களில் மீன்களில் இருந்து கிடைக்கும் கேவியரும் ஒன்று. கேவியர் (Caviar) என்பது ஸ்டர்ஜன் குடும்பத்தை சேர்ந்த மீன்களின் சினை அல்லது முட்டை என கூறப்படுகிறது.

கஸ்பியன் மற்றும் கருங்கடலில் இவ் வகை மீன்கள் அதிகம் காணப்படுகிறது. இதன் விலை உங்களை வாயடைக்க வைக்கும்.

ஏனென்றால் இதனை வாங்குவதற்கு நீங்கள் 34,500 டொலர்கள் ( 1 கிலோகிராம் இலங்கை மதிப்பில் சுமார் 6,370,131 ரூபா)  வரை செலவழிக்க வேண்டும்.

மற்ற மீன்களிலும் இதுபோன்ற முட்டை காணப்படும். ஆனால் அது சாப்பிடுவதற்கு உகந்தது கிடையாது.ஆனால் கேவியர் உப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் என கூறுகின்றனர். இது பார்ப்பதற்கு உருண்டையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

சிறிய முட்டை போல் இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சீன பிராண்டான கலுகா குயின்தான் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கேவியர். உலகின் மொத்த விற்பனையில் 35% இங்கு தான் நடைபெறுகிறது. இந்த மீன் இனம் அழிவை சந்தித்து வருவதால், இதனை தனியாக வளர்த்து அதில் இருந்து கேவியரை எடுத்து விற்பனை செய்கின்றனர்.

அங்கு தற்போது 3,20,000 ஸ்டர்ஜென் வளர்க்கப்படுகிறது. இவை ஒட்டுமொத்தமாக 3000 டன் எடை இருக்கும் என தெரிவித்துள்ளனர். 13 அடி நீளமும்,294.835 கிலோகிராம்  எடையும் கொண்ட இந்த மீனை வளர்க்கும் போது ஆகும் செலவை விட, விற்பனை செய்யும் போது ஆறு மடங்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

மீனில் இருந்து பிரித்தெடுக்கும் இந்த கேவியரை கழுவி சுத்தம் செய்த பிறகு உலர வைக்கின்றனர். உப்பு பயன்படுத்தி இதனை தயார் செய்து ஒரு போத்தலில்  அடைத்து விற்பனை செய்கின்றனர். குளு குளு ஐஸ் கட்டிகளில் வைத்து இதனை சாப்பிடுகின்றனர்.

உள்ளங்கையின் பின்புறத்தில் வைத்து அதனை சாப்பிடும் முறையையே பலரும் பின்பற்றுகின்றனர். இதனை ஒருமுறை ருசிபார்த்து விட்டால் அதன்பிறகு இந்த சுவையை உங்களால் மறக்க முடியாத அளவுக்கு இருக்குமாம்.