நெதர்லாந்தில் சவுதிதூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்

325 0

நெதர்லாந்தில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

ஹேக்கில் உள்ள தூதரகத்தின் மீதே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலைக்கு முன்னதாக இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருபதுக்கு மேற்பட்ட தடவை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் இடம்பெறுகின்றன காரணங்கள் இதுவரை தெரியவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்திற்கான சவுதிஅரேபிய தூதரகம் இந்த தாக்குதலை கோழைத்தனமானது என கண்டிதுள்ளதுடன் தனது பிரஜைகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளமைக்கான தடயங்களை தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

சவுதிஅரேபியாவின் ஜெத்தாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வில் நேற்று சிறிய குண்டுவெடிப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.