கொரோனாவுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்ததற்கான பெருமை தன்னை வந்து சேரக்கூடாது என்பதற்காக, தடுப்பூசி வெற்றி குறித்த அறிவிப்பு தேர்தலுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஃபைசர் (Pfizer)என்ற நிறுவனம் தங்களின் தடுப்பூசி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 90 % வெற்றி பெற்றுள்ளதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து தனக்கு வரும் புகழை தடுக்கும் வகையில், ஃபைசர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் காலதாமதமாக தடுப்பூசி வெற்றி குறித்த தகவலை அறிவித்துள்ளதாக குற்றஞ்சாட்டி ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

