வெளி விவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம் பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ட, வெளி விவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்று முதல் மேற் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, பிறப்புச் சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ்கள் என்பவற்றை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வார நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதன் சேவைகள் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளி விவகார அமைச்சின் துணை தூதரகத் திற்கு வருவதற்கு முன்பு பொதுமக்கள் முன் கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாகும் என வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி 0112 338 812 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்கூட்டியே முன்பதிவு செய்யாத எந்த ஒரு நபர்களை யும் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்காதிருக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

