கொரோனா தொற்றால் நாடு திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த 401 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
325 பேர் டுபாயிலிருந்து வருகைத் தந்துள்ளதுடன்,; 50 பேர் எமிரேட்ஸ் விமான சேவை மூலமும் 275 பேர் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் அமைதி படையில் பணிபுரிவதற்காக, ஆபிரிக்காவுக்குச் சென்ற 76 இலங்கை இராணுவத்தினரும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

