வரலாற்றறிவோடு விடுதலையை விரைவாக்குவோம், தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி – 2020

304 0

பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல், எதிர்வரும் 21 ,22 ஆம் நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தமிழ்ச்சோலை மாணவர்கள் மட்டத்தில் நடைபெற்ற இத்திறனறிதல் மாவீரர் நாளையையொட்டி பொதுமக்களுக்காக விரிவாக்கப்படுவதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே செய்யக்கூடிய இத்திறனறிதலின் முடிவில் சான்றிதழ்கள் மின்னஞ்சலுக்கு உடனடியாகக் கிடைக்கப்பெறும் வகையிலான புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. திறனறிதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் தமிழ்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஊடகங்களில் வெளியிடப்படும்.
கறுப்பு யூலை, தியாக தீபம் திலீபன்,மற்றும் மாவீரர் நாள் ஆகிய நினைவு நாட்களையொட்டி இத்திறனறிதல் பொதுமக்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறவிருக்கிறது. மாவீரர் நாளையொட்டி நடத்தப்படும் இத்திறனறிதல் தமிழீழப் போராட்டம் தொடர்பான பரந்துபட்ட கேள்விகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தமிழ்ச்சோலை தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

வரலாற்றைப் படி ! வரலாற்றைப் படை எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய இளையோரிடத்தே எமது இனம் சார்ந்த சரியான வரலாற்றுப் புரிதல் இன்றியமையாதது. புதிய தொழில்நுட்பத்தூடு வரலாற்றை இளையோரிடத்தே கொண்டு செல்வதே இத்திறனறிதலின் நோக்கம் எனவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவுத்துள்ளது.