30 ஆவது கொரோனா மரணம் பதிவானது

341 0

வைரஸ் தொற்றால் கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.