கொரோனா அச்சம் – பதுளையில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

291 0

பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த குடும்பங்களுக்கு சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.