அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சினருக்கு எந்தவித தகுதியும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இருந்த போதிலும் இலங்கையை பொறுத்தவரையில் பாரிய நம்பிக்கையுடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றாளர்களை துரிதமாக அடையாளம் காண்பது மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பது போன்றவற்றில் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்தை குறை கூறுவதற்கோ விமர்சிப்பதற்கோ சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

