ஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

245 0

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த பட்டுள்ளது இந்நிலையில், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்கு எந்த தடையும் இருக்காது என பரீட்சை கள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரித் துள்ளார்.

ஊரடங்கு சட்டம் பரீட்சைகளுக்குத் தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சரியான நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு அதிகபட்ச உத விகளை வழங்குமாறு பரீட்சை ஆணையர் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், இன்றைய தினம் கணக்கீடு வினாத் தாளுக்குச் சாதாரண திட்டமிடப்படாத கணிப்பான் களைப் பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.