திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு பொருளுதவி

258 0

திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு(WNO) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கொவிட்-19 தொற்றாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.


கொன்னறுவ, ரன்தம்பே, பெனிதெனிய, களுத்துறை, நிலாவல மற்றும் மாத்தறை ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 1500 பேருக்கு ரூபா 5 மில்லியன் பெறுமதியான உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

இவ்வமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் மற்றும் ஏனைய உறுப்பினர்கள்  லொறி ஒன்றின் மூலமாக மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்தனர்.