சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

252 0

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று பிரதோஷம் வருகிறது. அதேபோல ஐப்பசி மாத பவுர்ணமியும் வருவதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் சென்று குளிக்க வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனுமதி நாட்களில் மழை பெய்தால் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும். கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

பிரதோஷம் மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.