மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

257 0

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரத்து 610 கனஅடியாக இருந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 258 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9 ஆயிரம் கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது.