தாய்வானின் கடற்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் சுமார் 2.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான 100 ஹார்பூன் (Harpoon) வகை ஏவுகணைகளை அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட மூன்று ஆயுத அமைப்புகளை தாய்வானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்த நிலையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாய் வான் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

