ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு – கெஹலிய

232 0

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “20ஆவது திருத்தச்சட்டத்தினையும் புதிய அரசியலமைப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

எதிர்காலத்தில் முழுமையான புதிய அரசியலமைப்பே கொண்டுவரப்படும். இதற்கான 11 பேர் கொண்ட விசேட நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இந்தப் பணியை வேகமாக செய்து வருகின்றனர். 20ஆவது திருத்தச்சட்டம் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவே கொண்டுவரப்பட்டது.

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.