மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் -இந்தோ பசுபிக் கொள்கையை வலுப்படுத்தும்- அமெரிக்கா

420 0

வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடனான கூட்டு செயற்பாடு குறித்த அமெரிக்காவின் அர்ப்பணி;ப்பை வெளிப்படுத்துவதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்டகஸ் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த விஜயம் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் பிராந்தியம் குறித்த இரு நாடுகளினதும் பொதுவான இலக்குகளில் மேலும் முன்னேற்றத்தை காண்பதற்கு இந்த விஜயம் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓக்டோபர் 25 திகதி முதல் முப்பதாம் திகதி அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.