கயிற்றின் மீது நடந்து உலக சாதனை படைத்த நபர்!

396 0

ஜெர்மனியில் மைதானத்தின் குறுக்கே கட்டப்பட்ட 230 மீற்றர் நீளமுள்ள கயிற்றின் மீது ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நடந்து சென்று ஜென்ஸ் டெக்கே (Jens Decke) என்பவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நூரெம்பர்க் (Nuremberg ) நகரிலுள்ள மேக்ஸ் மொர்லாக் மைதானத்தில், 73 மீற்றர் உயரத்தில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்லாக்லைனிங் (Slack Line) என அழைக்கப்படும் கயிறு மீது நடந்து செல்லும் இந்த விளையாட்டில், மைதானத்தின் குறுக்கே கடக்கப்பட்ட அதிகபட்ச தூரமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=130ONfGFHS4&feature=emb_logo