கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை, 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிய முடியுமென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வைரஸ் தொற்று ஏற்பட்டால் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கு அத்தொற்று பரவாமலிருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் என்பவற்றை இதன்மூலம் அறிய முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் இருப்பதை உணர்ந்தால், துரிதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளவும், தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியுமென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேற்படி துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சேவைகளைப் பெற முடியும் என்பதுடன், 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

