கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பலி

23 0

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடைய உறவினர்கள் நேற்று (16) ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டதை அடுத்து சுகவீனமுற்ற குறித்த பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவ களுபே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 13 அம் திகதி போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.