வவுனியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் லண்டனில் மரணம்

51 0

தமிழர் தாயகத்தில் வவுனியா கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாக கொண்டு லண்டனில் வசித்த சிறுவன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று (11) இரவு 7 மணியளவில் தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்ற சிறுவன் பாதசாரி கடவையை கடஙக்க முற்பட்ட போது வேகமாக வந்த கார் மோதியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளான்.

m

குறித்த சம்பவத்தில் வவுனியா பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியை பூர்வீகமாக கொண்ட சசிகரன் அகர்வின் வயது 4 என்ற சிறுவனே மரணமடைந்தான்.