PCR பரிசோதனைகளை மேற்கொள்ள அவசரப்பட தேவையில்லை

232 0

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த அவசரப்படத் ​தேவையில்லை என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பின் 2 தொடக்கம் 10 நாட்களினுள்லேயே அதனை அறிந்து கொள்ள முடியும் என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விஷேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கையில் கொரேனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 3,306 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 1,309 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.